Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பார்வை

ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி பல அணுகு முறைகள் உள்ளன. நான் கேட்ட பரவலான விமர்சனங்கள் :
முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி சரி இல்லை என்று சிலர் ,
மேலோட்டமாக படத்தைப் பார்த்து பிடிக்கவில்லை என்று சிலர்,
பிடிக்கவில்லை என்றாலும் நன்றாக உள்ளது என்றே சொல்லுவோம்
என்று சிலர், ஆங்கிலப் படம் போலுள்ளது என்று சொல்லுவோம் என்று சிலர். இவை எல்லாம் நீக்கிவிட்டு இந்த படம் நிஜமாகவே எப்படி உள்ளது என்று யோசித்து பார்த்தல், அது ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு போகும். எனவே மிகச் சுருக்கமாக சொல்லும் முயற்சியில் இறங்குகிறேன்.





படத்தின் முதல் காட்சியான 1279 ஆம் ஆண்டில் நடக்கும் மூன்றாம் இராஜேந்திர சோழனின் காட்சியிலேயே படத்தின் காட்சி அமைப்பு எவ்வளவு தரத்தை எட்டி இருக்கிறது என்று நன்றாக தெரிந்துகொள்ளலாம். சோழ வர்க்கம் அழிவைத் தொடும் தருணங்களில் ஒரு சோழ இளவரசனைக் காப்பாற்றும் இந்த காட்சி படத்தின் கரு.
அடுத்து வரும் படத்தின் ஆரம்ப காட்சிகள் சாதரணமாக நகர்கின்றன. ஆங்காங்கே செல்வாவின் touch. எம்.ஜி.ஆர் யின் ஆயிரத்தில் ஒருவனின் பாடலை (கிட்டத்தட்ட முழு பாடலைப்) போட்டு ஆடுவதெல்லாம் சாதாரண இயக்குனர்கள் கடைபிடிக்கும் மொக்கைகள்.
அதன் பின் தொடரும் காட்சிகள், சோழர்களை கண்டுபிடிக்க ஏழு ஆபத்துகளைத் தாண்டிச் செல்லும் காட்சிகள் அட்டகாசம். கடல் , காட்டுவாசிகள், காவலர்கள், பாம்பு, பசி, புதைக்குழி, கிராமம் போடற ஆபத்துகளைக் கடக்கும் காட்சிகள் மிக நுணுக்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
காட்டு வாசிகள் மற்றும் பாம்பு காட்சிகளில் பிரமிப்பு. காவலர்களிடம் சண்டை இடும் காட்சிகளில் சிறப்பான Camera.


நடராசன் நிழலைத் தொடரும் காட்சி சிந்திக்க வேண்டிய ஒன்றா சிந்திக்க தேவை இல்லாத ஒன்றா என்று சிந்திக்கச் செய்கிறது.
இப்படி அனைத்துமே வேகமாகச் செல்கிறது. இரண்டாம் பாதியில் உள்ள சில சின்ன திரைக்கதை கோளாறுகளை நீக்கினால், இது நிச்சயம் ஒரு சிறந்த படம். தற்போது சொல்லப்போனால், இது ஒரு சிறந்த முயற்சி.
Graphics பொறுத்தவரை ஒரே பேச்சு தான். படம் முழுக்க பல்வேறு காட்சிகளில் இடம் பெரும் கிராபிக்ஸ் நம்மால் முடிந்த, முகம் சுளிக்கச் வைக்காதவை . நாம் இது வரை தொடாத ஒரு இடம். இந்த கிராபிக்ஸை ஆங்கில படத்துடன் ஒப்பிடுவது பாமரத்தனம்.
'உன் மேல' பாடலின் காட்சி அமைப்பு typical செல்வா touch. 'ஒ ஈசா ' பாடலின் visual பார்த்தல் அதன் making மற்றும் editing சாதாரண தமிழ் பாடலைத் தாண்டி வெகு தூரத்தில் உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். படத்தின் இசையை பொறுத்தவரை ஒன்று மட்டும்
தான் சொல்ல முடியும். படத்தின் திசைக்கும் , தரத்திற்கும், வெற்றிக்கும் (ஒருவேளை பெற்றால்) எந்தவித இடையூறும்
விளைவிக்காத இசை. அவ்வளவே. சில இடங்களில் பின்னணி இசை நன்றாகவே உள்ளது.. உதாரணம்.. ரீமா சென் சோழ
மன்னனை ஏமாற்றியது அனைவர்க்கும் தெரிந்துபோன சோக காட்சியின் பின்னை இசை அருமை. எனினும் இதற்கு
முந்தைய செல்வா படங்களில், ஒவ்வொரு பாடலும் மிரட்டும், பின்னணி இசை (BG scores) தனியே கேட்டாலும் வாயை பிளக்க வைக்கும். இந்த படத்தின் இசை அவ்வாறு நிச்சயம் இல்லை. ஆனால் இதற்கு ஒரு exception தான் 'Celebration of Life'.
படம் வெளியாகும் முன்னரே இந்த Music Track ஐ கேட்டு வியந்தேன். படத்தில் அதன் காட்சியுடன் சேர்ந்து பட்டையை கிளப்புகிறது.அதே போல், சோழ மன்னனின் ஆறுமுக காட்சி, பின்னணியில் ' The King Arrives' அருமை. நிச்சயமாகச் சொல்வேன்,
Celebration of Life மற்றும் The King Arrives காட்சிகள் பின்னணி இசையுடம் சேர்த்து பார்பவர்களை மிரள வைக்கும். Hollywood தரத்தை ஒத்தவை. மற்றபடி ' ஒ ஈசா , உன் மேல ' போன்ற பாடல்கள் எல்லாம் சாதரணமான ஹிட் பாடல்கள். அவ்வளவே. அதன் இசைகளில் பாராட்ட ஒன்றும் இல்லை.




மற்றபடி படத்தினை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்தால் :
சோழர்கள் தப்பிச் செல்லும்போது ஏற்படுத்திய ஏழு ஆபத்துகள், சோழர்களை தேடிப்போன ஒரு பாண்டியத் தளபதி அந்த ஏழு ஆபத்துகளைப் பற்றிய குறிப்புகளை ஓலைச்சுவடியில் வடித்திருப்பது, குகைக்குள் காலாகாலமாக நடக்கும் சோழர் சாம்ராஜ்யம், அவர்களின் வாழ்க்கைமுறை, பின்பு நடக்கப் போவதை முன்பே கணித்து ஓவியங்களாக பாதளக்குகையின் சுவர்களில் தீட்டி வைத்திருப்பது, கடைசி ஆபத்தான கிராமத்தின் அமைப்பு. இவை எல்லாம் வித்தியாசமான பிரமிக்கவைக்கும் கற்பனைகள்.

இன்னும் நுணுக்கமாகப் பார்க்கப் போனால், கிராமம் சென்றபின் பைத்தியமாகி பின்னர் முதியவரின் முன் ஆடைகளை அகற்றிவிட்டுச் செல்வது , அந்நியர்களுக்கு சோழர்கள் விதிக்கும் சோதனை, சொழா மன்னனின் பாத்திரப் படைப்பு, 13 ஆம் நூற்றாண்டின் தமிழ் பேச்சு, ரீமா
சென்னின் கன்னித்தன்மையை சோதனை செய்வது , ரீமா சென்னுக்கும் பார்த்திபனுக்கும் இடையில் நடக்கும் காட்சிகள், மயானத்தில் வென்றபின் கார்த்திக்கு மரியாதை கொடுப்பது. இது போன்ற கற்பனை அமைப்புகள் படத்திற்கு அதிக பலம்.

பின்னர்படத்தின் முடிவு, முதல் காட்சியைப் போலவே அமைகிறது - சோழ இனம் அழியும் பொது, இளவரசன் மட்டும் காப்பாற்றப் படுவது.

பல காட்சிகளில் உள்ள வித்தியாசமான கற்பனை. இயல்பான நடிப்பு ( கிராமம் சென்றபின் 3 பேருக்கும் பைத்தியம் பிடிக்கும் காட்சிகளில் கூட அவர்கள் நடிப்பின் திறன் காணலாம் ). போர்க்காட்சிகளை இது போன்று வேறு தமிழ் படத்தில் Reality யுடன் பார்த்திருக்க முடியாதது.
செல்வராகவனின் இயக்கம், ராம்ஜியின் ஒளிப்பதிவு, சந்தான‌த்தின் கலை அனைத்தும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவை.
அங்கங்கே Troy, Gladiator, 300 போன்ற படங்களின் சாயல் வந்து போவது உண்மை. ஒரு சில Formula களை காப்பி அடித்தாலும் ஒளிப்பதுவும், காட்சி அமைப்பும் நான்றாக இருக்கத்தானே வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை இதை ஒரு நல்ல படம் என்று சொல்வதை விட, மிரளவைக்கும் முயற்சி என்று சொல்வேன். தமிழ் சினிமாவின் அடுத்த தளம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆங்கிலப்படங்களுக்கு நிகரானது என்று சொல்ல முனையும் வினாடியில் , கமல்ஹாசன் சொன்னது தான் ஞாபகம் வருகிறது :
' இதனை ஆங்கிலப்படங்களுக்கு நிகரானது என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் தான் தரமான படம் என்று அர்த்தமா?
ஆங்கிலேயன் சவரன் செய்வது எப்படி என்று தெரியாமல் ஆதி மனிதனாக திரிந்த காலத்தில் யாப்பிழங்காரிகை எழுதிய கூட்டம் இது . உலகம் சுற்றும்போது ஒரு பக்கம் பகல், இன்னொரு பக்கம் இரவு என்பது போலொரு சரித்திர மாற்றம் தான் இவை. நிலை மாறும்'

தமிழ் சினிமாவின் நிலை அப்படி மாறுமாயின் 'ஆயிரத்தில் ஒருவன்' அதற்கொரு துவக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.