எனது சமுதாயம்/ உலகம் என்னிலிருந்து மாறுபடுகின்றது. எவ்வாறு என்று
எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு நானே விடை கொடுக்கும் கட்டாயம்.
இவற்றுள் சிந்தனையின் வெளிப்பாடும் அடங்கும்.
அவற்றுள் சில...இதோ... :
- கே: கடவுள் உண்டா ?
ப : அன்பே சிவம்
- கே: விதியை நம்புவதுண்டா ?
ப : ஆம். விஞ்ஞானம் கூறிய அனைத்து விதிகளையும் நம்புவதுண்டு .
- கே: ஆசை இல்லை என்றால் ஏமாற்றம் இராதல்லவா ?
ப: ஆம். மாற்றமும் இராது.
- கே: மன்னிக்க முடியாத தப்பு எது ?
ப: தப்புக்கு மன்னிப்பு தருவது.
- கே: தப்பு செய்யாதவர்கள் உண்டா ?
ப: உண்டு. வாய்ப்பு கிடைக்காதவர்கள்.
-கே: முயற்சி செய்தால் வெற்றி நிச்சயமா?
ப: முயற்சி இல்லையேல் தோல்வி நிச்சயம்.
-கே: பிச்சைகாரி ; விலை மாது - ஒப்பிடுக
ப: தவறு ; தப்பு
-கே: கோபப்படுவது தவறா ?
ப: கோபத்தை காரணம் காட்டுவது தவறு.
- கே: தோழி மனைவி ஆகலாமா?
ப: மனைவி தோழியாக இருப்பது நன்று.
-கே: பெண்களிடம் நீங்கள் கண்டு ஆச்சிரியப்படுவது ?
ப: ஆச்சிரியப்படும் அளவிற்கு ஒன்றுமே இல்லாமல் போனது தான்.
தொடரும்...
No comments:
Post a Comment