Monday, September 27, 2010

கேள்விகள்

என்னிடம் பரவலாக கேக்கப் படும் கேள்விகளில் ஒன்று - நீங்கள் கமல் ரசிகரா? இளையராஜா ரசிகரா? என்று :

எளிதாகப் புரிந்துகொள்பவர்களுக்கு ஏற்றாற்போல் சொன்னால்,
நான் யாருக்கும் ரசிகன் அல்ல. எனக்குள் இருக்கும் ரசனைக்கு மட்டுமே நான் ரசிகன். காசு குடுத்து படம் பார்ப்பவன் நான், என் தேவைக்கும் ரசனைக்கும் முக்கியத்துவம் குடுக்காமல், நான் ஏன் கமலுக்கும் இளையராஜாவுக்கும் முக்கியத்துவம் குடுக்க வேண்டும்?

கமலின் திறமை சாதாரண தமிழ் சினிமா இயக்குனர்களிடமிருந்து மிக உயர்ந்து நிற்கிறது. அதே போல் இளையராஜா. நான் இதுவரை கண்டத்தில் இவர்களின் தளத்தில் இவர்களே ராஜா. மட்டமான நமது மக்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் சுயநலம் மறுத்து நல்ல படைப்பாளிக்கும் தைரியங்கள் கொண்டவர்கள். இது தான் என் கருத்து.

மேல்தளம் சற்று பலவீனம் அடைந்தவர்க்கு ஏற்றாற்போல் சொன்னால்,

ஒருவரின் படைப்பைப் பார்த்து அதனால் Impress ஆகி, உடனே அவனுக்கு ரசிகன் ஆகிவிட வேண்டும். அதன்பின் அவனது படைப்புகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அதை ரசிக்க வேண்டும் என்பது தான் 'ரசிகன்' என்பதற்கு உங்களது அர்த்தம் என்றால், மன்னிக்கவும் நான் உங்கள் அளவுக்கு புத்திசாலி இல்லை. இப்படிப்பட்ட புத்திசாளிகளுக்குப் பெயர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்கள்.என்னைப் பொறுத்த வரையில் ரசிகன் என்பவன் ஒரு திறமைசாலியின் படைப்பு , பிரமிக்க வைப்பின், ஊரே அதை எதிர்த்தாலும் அது நல்ல படைப்பு என்பதில் நிச்சயமாக இருக்க வேண்டும் (எ.கா : ஹேராம்). அப்படியொரு திறமைசாலியின் படைப்பு தரமற்று இருந்து அதை அனைவரும் போற்றிப் புகழ்ந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் (எ.கா: PKS)
***********************************************************************************************

அடுத்த கேள்வி: உங்களின் பெரும்பாலான கருத்துக்கள் ஏன் விவாதத்திற்கு உட்பட்டவையாகவே உள்ளது?

அவ்வாறு எண்ணுபவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் ஒன்று தான் :
சிந்தனைக்கு உட்பட்ட அனைத்து விஷயங்களும் விவாத்திற்கு உட்பட்டவை தாம். But not vice versa.

3 comments:

வால்பையன் said...

என்னையெல்லாம் ஒரு பய கேள்வி கேட்க மாட்டிங்கிறான் தல! :)

ŃąVêέŃ said...

பெரிய ஆட்களின் கோட்பாடுகள் அனைவருக்கும் தெரியும் தோழர் :-)

Anonymous said...

PKS தரமற்ற படைப்புன்னு சொல்வதை என்னால் ஏற்க முடியாது. அதேபோல் ஹே ராம்மையும் முழுமையான படம் என்று ஏற்க முடியாது நண்பரே..

Yazhini_appa