நீ செய்வதற்கும்
நான் செய்வதற்கும்
விடை ஒன்று தான்.
அர்த்தங்கள் வெவ்வேறு.
‘பசி’
காமம் என்னும் சொல்லை
உச்சரிக்க அஞ்சும்
உன் காலாச்சாரம் தான்
எமக்கு இன்னும்
சோறு போட்டு வருகிறது.
மனைவியின் நினைவு,
மனசாட்சியின் குரல்,
கடவுள் நம்பிக்கை.
என்னருகில் வருகையில்
அனைத்தும் கலற்றப்படுகிறது
உன் அழுக்குச்
சட்டையுடன் சேர்த்து.
'ஒருவனுக்கு ஒருத்தி'
விதிமுறைகள் காப்பதுண்டா?
எங்களுக்குள் உண்டு
தினம் தினம் இரவு..!
எம்மிடம் வருபவனுக்கும்
வராது மறுப்பவனுக்கும்
வேறுபாட்டிற்கு தமிழில்
அழகான ஒற்றைச் சொல்.
'பயம்'
உங்களுக்கு
செய்ய முடியா இன்பம்.
எங்களுக்கு
செய்ய முடியாவிடில் இன்பம்.
ஆணிடம் வேசி
அடிமையும் ஆகிறாள்.
ஆணிடம் அடிமைப்பெண்
வேசியும் ஆகிறாள்.
என்னை அவலம் பேசி
காதலியை கொஞ்சிப் பேசி
காதலிக்குள் என்னைத் தேடும்
காமுகனே காதலன்.
'இளங்கன்று பயம் அறியாது'
பழமொழிகள் எங்களிடம்
தோற்பதுண்டு.
பகல் முழுக்க
நடந்த விசாரணைக்கு
இரவு முழுக்க
தண்டனை வழங்கியது
உங்கள் நீதிமன்றம்..!!!
22 comments:
//ஆணிடம் வேசி
அடிமையும் ஆகிறாள்.
ஆணிடம் அடிமைப்பெண்
வேசியும் ஆகிறாள்.//
superb lines...
Hi,
I hope , it is a pretty decent work..Compare to others works in competition it is very good..I dont mean 1y by 'its theme' but by way of words used in it.....
WORDS are very simple ,msg was easily conveyed to reader....Its more imp than using words which are existed 1y in literary books...Many 'literary words unless they dont handle properly will not convey the mood of poem'...I hope , judges when take ur poem for consideration they shud also consider the 'way u, used the words , which appropriately conveyed the meaning rather than looking at the 'literature words'...
My concern on ur poem is ' why u wrote such a long poem' when the mood and msg is alreay conveyed to the reader....Will the poem lost its track like the presentation in ' power points' if it is very long....?...
It is good to see that u used mirror and lion for an article in ur blog..I penned a poem with 'mirror and lion' for different theme on 2006 but published again for this comp....Good analogies...ALL DA BEST.....
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மிக அழகான கவிதை. கடைசி ஐந்து பத்திகள் அற்புதம். நல்ல சிந்தனையோடு எழுதப்பட்ட இக்கவிக்கு வெற்றி கிட்டிட வாழ்த்துக்கள்!
ஆனால், வேசிக்குக் காரணம் பசிதான் என்பதை மட்டும் என்னால் முழுக்க ஏற்கமுடியவில்லை. 40 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கும் வேலைபார்க்கும் அன்றாடக் கூலிகள் இங்கு அதிகம். அவ்வளவு பேரும் வறுமையின் காரணமாக வேசித்தொழிலுக்கா மாறிவிட்டார்கள்? அப்படியெனில் எவ்வளவு வேசிகள் நம் நாட்டில் இருக்கவேண்டும்!
பெரும்பாலும் ஒரு மோகத்தின் காரணமாக வந்துவிடுவார்கள். அதன்பின்னர் கிடைக்கும் உடல் உழைப்பில்லாமல் காசு கிடைக்குறது என்று அதையே தொடர்வார்கள்.
அன்புடன்
உழவன்
Can u pls remove word verfication?
ஒரு பெண் வேசி ஆவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், உங்கள் வரிகளில் உள்ள உண்மை உறைக்கவே செய்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
அற்புதமான நடை. வெற்றி பெரும் கவிதைகளில் இதுவும் ஒன்றாக இருக்க வாழ்த்துக்கள்
//ஆணிடம் வேசி
அடிமையும் ஆகிறாள்.
ஆணிடம் அடிமைப்பெண்
வேசியும் ஆகிறாள்.//
arputham..
naan eluthum varigal, ennayum en karuthukalayum mattume piratipalikkum.. annal thangal aduthavarin valiyai miga arpthamaag vilakki irulireerga..
இது கவிதை!
//பகல் முழுக்க
நடந்த விசாரணைக்கு
இரவு முழுக்க
தண்டனை வழங்கியது
உங்கள் நீதிமன்றம்//
வலிமிக்க வலிமையான சொற்கள்..அருமை
மிக அருமையான படைப்பு .. . வார்த்தைகள் ஒவ்வொன்றும் "நச்"...
ஆஹா!!
சில எழுத்துப்பிழைகள்
>>என்னருகில் வருகையில்
அனைத்தும் கலற்றப்படுகிறது
என்னருகில் வருகையில்
அனைத்தும் கழற்றப்படுகின்றன
வாழ்த்துகள்! அழகான கவிதை
unmai kasakkirathu!!!
>>'இளங்கன்று பயம் அறியாது'
பழமொழிகள் எங்களிடம்
தோற்பதுண்டு.
நச்
வேசியின் “கற்பு”!
ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கொண்ட கவிதைகளுக்கு மத்தியில், ஒரு பத்தி ஓராயிரம் கவிதையின் பருப்பொருள் கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு பத்தியும்.. உங்கள் உண்மையான கரிசனமும் கோவமும் தெரி(க்)கிறது..
வாழ்த்துகள்..
-catchvp
அருமை
என் போன்ற இலகு தமிழ் கவிதை விரும்பிகளுக்கு இது நல்லதொரு விருந்து ...வாழ்த்துக்கள் நண்பா.
உங்கள் மொழியிலே "கெத்து "!!!!!!!!
Post a Comment