நான் எப்பொழுதும் தமிழில் எழுதுவதைக்கண்டு நான் தமிழ் வெறியன் என்றும், ஆங்கிலத்தை வெறுப்பவன் என்பது போலவும் சிலர் நினைகிறார்கள். கேள்வியும் கேட்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு எனது ஒரே பதில்.
பொதுவாகவே தாய்மொழி, தாய்நாடு போன்ற Buildupகள் என்னிடம் அதிகம் கிடையாது (ஒரு சில முட்டாள்தனம் நீங்கிய எண்ணங்கள் தவிற. அதைப் பற்றி பின்னதொரு பதிவில் பேசுவோம்). தமிழ் மொழிக் காரணாக பிறந்ததால் ‘தமிழ் தமிழ்’ என்று கோஷம் போடவேண்டாம். இதுவே என் கையில் இல்லாத என் பிறப்பு ஒரு வேலை பிரான்ஸ் நாட்டில் இருந்திருந்தால், பிரெஞ்சு கோஷம் போடா வேண்டுமா? இதற்கு பெயர் தான் பற்றா?
தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழி என்று அனைவருக்கும் (குறைந்தபட்சம் அனைத்து தமிழர்க்கும் ) தெரியும். அப்படியொரு மொழியை கண்டு/கற்று வியக்கிறேன். அவ்வளவு தான். இன்றும் அதனைப் படிக்க படிக்க வியப்பாகத் தான் உள்ளது. இதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்பு. தமிழை நான் படிப்பதும்/வியப்பதும்/நேசிப்பதும் கூட, அதன் சிறப்பினால் தான், தாய்மொழி என்பதால் அல்ல. நான் வேற்றுமொழிக் காரணாக இருந்து தமிழ் கற்றிருந்தாலும் இதே நிலை தான்.
என் கையில் இல்லாத என் பிறப்பு தமிழ் மொழிக்குறிதாக அமைந்தது ஒரு சந்தோசம். காரணம் என்னால் தமிழ் படிக்க, அதன் சிறப்புகளை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அது. அவ்வளவு தான். தமிழில் பேசுவதையோ எழுதிவதையோ நான் எக்கணமும் பெருமையாக நினைத்ததில்லை. தமிழனாக இல்லாமல்போயிருந்தால் இதனை செய்திருக்கப் போவதில்லை. அதன்பின் இதில் என்ன பெருமை?
சரி. தமிழனாகப் பிறந்து தமிழ் பேசுவதில் என்ன பெருமை? அது ஒரு சாதாரண விஷயம். தமிழர்களில் பலர் அந்நிய மொழியை பேசுவதில் பெருமை அடைகிறார்கள், எந்தவித அர்த்தமும் இல்லாமல். அவர்கள் செய்வது கேவலம் என்பதால் நாம் செய்வது சாதனை ஆகிவிடுமா? தமிழில் பேசுவது நமக்கு இயற்கை குடுத்த ஒன்று. அதனை பெருமை என்று சொல்பவன் யார் தெரியுமா? அவன் கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்கள் செய்யும் பிழையை வைத்துக்கொண்டு தன் சாதரனத்தனத்தை விளம்பரப்படுத்த நினைப்பவன். எனவே, தமிழ் ஒரு சிறந்த மொழி என்று மட்டும் தான் சொல்வேனே தவிர, தமிழில் பேசுவதை பெருமையாக நினைப்பவன் அல்லன் நான்.
அடுத்தது நம் காட்டு ராஜா 'ஆங்கிலத்திற்கு' போவோம். தமிழில் பேசுவதையே பெருமையாக நினைக்காத நான் எப்படி ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைப்பேன்? நிச்சயம் இல்லை. தனது தேவைக்கோ, வசதிக்கோ, செளகர்யத்திற்கோ ஆங்கிலம் பேசும் தமிழர்களுக்கு நான் என்றும் எதிர்ப்பு இல்லை. ஆனால் தனக்கு வாய்த்த சிறப்புகள் தெரியாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நினைக்கும் யோக்கியர்கள் பல. அதிலும் தமிழர்கள் இதில் கொஞ்சம் தலை தூக்கி நிற்பவர்கள். ஆங்கிலம் பேசுவதில் அப்படி என்ன பெருமை இருக்கிறதென்று எனக்கு புரியவில்லை. தமிழ் பேசுவதை கேவலம் என்று நினைத்து ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே என் எதிர்ப்பு. கவனிக்கவும் - இது தாய்மொழிப் பற்று அல்ல. அவ்வகையினரின் கேவலமான சித்தாந்தம் மட்டுமே காரணம். பின்னொருநாள் தமிழ் மொழி உலகையே ஆட்சி செய்தாலும் இம்மாதிரி ஆட்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்.
1 comment:
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment