தமிழ் சினிமா உலகில் தரமான படங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவற்றுக்கு மக்கள் தரும் குறைந்த பட்ச ஆதரவே.மக்களின் ஆதரவு பெற்ற மிகச் சில நல்ல படங்கள் இருப்பினும்,அதை தவற விட்ட தரமான படங்கள் ஏராளம்.
இந்த பட்டியலில் நான் கண்ட ஒரு படைப்பு அல்லது நான் முதலில் சொல்ல விரும்பும் ஒரு படம் 'புதுப்பேட்டை'.செல்வராகவனின் திறனை முழுதும் எடுத்துக் காட்டிய இந்த படம் தமிழ் மக்களிடையே வெற்றியை தழுவ விட்டதில் ஆச்சிர்யம் ஏதும் இல்லை.
ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாதை, அரசியல் கட்சியின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், மனிதனின் வாழ்கையில் நிகழும் பொற்காலங்கள்/போர் காலங்கள் மற்றும் படத்தின் தலைப்பான Survival of the Fittest என்று எதை வேண்டுமானாலும் கதையின் சாராம்சமாகக் கூறலாம். ஒவ்வொரு காட்சியிலும் வசனம், பின்னணி இசை, காட்சி அமைப்பு ஆகிய அனைத்தும் மிக அழகாக சித்திரிக்கப் பட்டுள்ளன.
தரமான கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, கதாபாத்திரங்களின் தேர்வு,ஒளிப்பதிவு,பின்னணி இசை,பாடல்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக சினிமாத்தனம் இல்லாத Reality. இவை அனைத்தும் இருப்பதால் தமிழ் நாட்டு ரசிகப் பெருமக்களுக்கு முதன் முறை பார்த்தவுடன் புரிந்துவிடும் என்று எதிர்பார்த்தது இயக்குனர் செல்வராகவனின் மிகப்பெரிய தவறு.
செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா ஜோடியின் இசைப் படைப்பில் உச்சத்தை எட்டியிருக்கும் ஒரு படைப்பு.
யுவன் சங்கர் ராஜா - நா.முத்துக் குமார் ஜோடியின் உச்சத்தை எட்டியிருக்கும் பாடல்கள்.
'இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்;
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்'
'உலகதின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்;
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் '
'இது அழித்தல் வேலை. இந்த உலகன் தேவை. அதை நாங்கள் செய்தல், ஊர் தான் வணங்குமா? '
'காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே, கல்லடி கிடைக்கும்'
போன்ற பாடல் வரிகள் அதனை எடுத்துக் காட்ட போதுமானவை.

- நல்லதொரு படைப்பை வழங்கி தமிழ் சினிமா தரத்தின் உயர்வுக்கு உறுதுணை அளிக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி.
- தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொண்ட படங்களை பட்டியலிட்டால் முன் வரிசையில் அமரக்கூடிய படங்களில் நிச்சயம் இடம் பெரும்
இந்த அறிய இசை படைப்பை கொடுத்த யுவன் சங்கர் ராஜா அவர்க்கு நன்றி.
- பாடல்கள் ஒவ்வொன்றுன்றிலும் தன் எழுத்து திறமையை நிரூபித்து காட்டிய பாடலாசிரியர் நா.முத்துக் குமார் அவர்க்கு நன்றி.
- 'ஒரு நாளில் வாழ்க்கை' என்ற உன்னதமான பாடல் ஒன்றை கொடுத்த
யுவன் சங்கர் ராஜா - நா.முத்துக் குமார் இனைப்புக்கு நன்றி.
- தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தரத்தை அதிகப் படுத்தி ரசிகர்களை குறைத்து கொண்ட இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி.
- இத்தனை சிறப்பு மிக்க ஒரு படைப்பை அடையாளம் தெரியாமல் மாத்திய நமது தங்கத் தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.
1 comment:
dei dei ... rombha feel pannatha :D
Post a Comment