Tuesday, December 7, 2010

நந்தலாலா : மிஷ்கின் -> ராஜா


கிட்டத்தட்ட அனைவரும் நந்தாலாவைப் பற்றி பேசி முடித்துவிட்ட சமயம், நான் இப்பொழுது தான் எழுதத் துவங்குகிறேன். பொதுவாக பதிவுகள் எழுத்தத் தயங்கும் ஒரே காரணம்... சோம்பேறித்தனம் தான் வேறென்ன. அதனையும் மீறி இதனை எழுதத் துவங்கும் ஒரே காரணம்... நன்றியுணர்வு தான் வேறென்ன. ஒரு பார்வையாளனாக வெகு நாட்கள் கழித்து நல்ல படைப்பொன்றை ரசித்தமைக்கு இருக்கும் உணர்வே.

நந்தலாலா படம் பார்ப்பதற்கு முன்னர் நமக்கே தெரியாமல் நம் மனதிற்குள் ஒளிந்திருக்கும் சினிமாவிற்கான கோட்பாடுகள் அனைத்தையும் அழித்திட வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் சினிமாவிற்கான கோட்பாடுகளை. அதாவது படத்தின் முதல் காட்சிகள் இப்படி இருக்க வேண்டும், படத்தின் கதைக்களன் இவ்வாறு, பத்து நிமிடத்தில் கதை இவ்வளவு நகர்ந்திருக்க வேண்டும் போன்ற முன்முடிவுகளை மறந்திடவும்.

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகத்துல்லியமாக, நிதானமாக, எதார்த்தமாக காட்சிகள் நகர்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சுவாரஸ்யத்திற்காக ஒரு காட்சி கூட சேர்க்கப் பட்டதாகத் தெரியவில்லை. தாய்மையைச் சொல்லும் கதை என்பதோ, பயணத்தை மையமாகக் கொண்ட கதை என்பதோ இதற்கு ஒரு கவர்ச்சி சொல்லாடலாக இருக்கலாம். உண்மையில் இது ஒரு அனுபவம். வாழ்க்கையைப் போல. படம் பாதி நகர்கையிலே பார்க்கும் சிலர் ..'என்ன தான் சொல்ல வர்றாங்க?' என்று முனகும் சத்தங்கள் கேட்டன. வாழ்க்கை செல்லும் வேகத்தை, திசையை, இயல்பை, மாறுதல்களைப் பார்த்து அவர்கள் இயற்கையை வினவும் கேள்வி தான் அது.

கடைசி பத்து நிமிடங்கள் கதை என்று சொல்லிக்கொள்ள உதவலாம். படம் முழுக்க நடக்கும் பயணமே கரு என்று சொல்ல உதவுகிறது. படத்தின் பயணத்தில் ஒட்டுமொத்தக் காட்சிகளைச் சேர்த்தால் அதில் சொல்ல முயல்வது பிரம்மிப்பூட்டுகிறது. காரணம் ஒன்று தான். எதார்த்தம் பிரம்மிப்பூட்டும் நிலையில் தான் தமிழ் சினிமாவும் அதன் ரசிகர்களும் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் இதில் நம் சமூகம் பற்றிய உணர்வு, மனித குணங்களின் இயல்பு, மனித நேயத்தின் அழுத்தம், தனிமையின் உச்சம் என்று அனைத்துமே மிகச் சுலபமாக ஆனால் அழுத்தமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கையைப் போல எதார்த்தமான பயணம் என்றால் அதனை வாழ்க்கையிலே பார்த்துக்கொள்வேன், சினிமா எதற்கு என்று கேட்பவர்களுக்காக இது.

போக இவை அனைத்தையும் அவரின் தனி பாணியிலே நகர்த்திச் செல்கிறார் மிஷ்கின். விரலை சுவரில் உரசிக்கொண்டே நடப்பது (பின்னர் தாயை தூக்கிக்கொண்டு நடக்கையில் தாயின் கால் விரல்கள் உரசுவதும்), பிச்சையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதனை மிரட்டி வாங்குவது, சில்லறையை மட்டுமே பணம் என்று நம்பும் அறிவு, கடவுளின் சிலைக்குரிய விளக்குகளை எடுத்துச் செல்வது, ஏன்...முக்கால்வாசி படத்தில் போட்டிருக்கும் பேண்டை கையில் பிடித்துக்கொண்டே நடப்பது உட்பட அனைத்துமே எளிமையான எதார்த்த கவர்ச்சிகள். மிஸ்கின் உண்மையாகவே நடித்திருக்கிறார்.

- அங்க பார்.அழுது அழுது சிரிச்சுருச்சு..
- இது உங்க அம்மான்னு பட்டி சொன்னாளா? இது உங்க பாட்டின்னு யார் சொன்னா? அம்மா சொன்னாளா?
- 'ஃபோட்டோ எப்படி முத்தம் கொடுக்கும்?' 'நீ மட்டும் ஃபோட்டோக்கு முத்தம் கொடுக்குற?'

போன்ற வசன்கங்கள் நிஜமாக ரசிக்க வைக்கின்றன.

நந்தலாலாவின் இசையை பேசாவிட்டால் அது 'நந்த'வைப் பற்றி மட்டும் பேசியதுபோலாகிவிடும். நந்தலாலா என்ற வார்த்தையை எழுதிய அடுத்த வினாடி இளையராஜா என்ற பெயர் தான் எழுதினேன் என்றார் மிஸ்கின்(படத்தின் டைட்டில் கார்டிலும் அவ்வாறே), உண்மையில் இளையராஜா என்ற வார்த்தைக்கு அடுத்து நந்தலாலா என எழுதியிருந்தாலும் தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இசை. இசை என்ற வார்த்தைக்கு இங்கு முழு அர்த்தம் 'பின்னணி இசை' என்றே கொள்ளலாம். 'ராஜாவின் இசை இல்லாமல் படமே இல்லை' என்பது பொய் தான். அனாலும் அதனை உண்மையைப் போல சொல்லத் தூண்டும் இசை. அதுவே அதன் சிறப்பு. உண்மையில் கதை மிஷ்கின் என்றால் கதாநாயகன் ராஜா எனலாம். படம் நகர்த்திச் செல்லும் பயணம், உணர்த்தப்படும் வலிமை இவற்றினுடன் ராஜாவின் பின்னணி இசை உண்மையான உணர்வுக்கு அருகே நகர்த்திச் செல்கிறது. இன்னும் சில காட்சிகளில் அமைதி அழகு.நந்தலாலாவைப் பொறுத்தவரை வசனம் பேசுகிறது. இசை வழியுறுத்துகிறது. அமைதி கற்பிக்கிறது.

மிஷ்கின் தனது தாயை சந்திக்கும்போது வரும் பாடல் முற்றிலும் ஏமாற்றமே. ராஜா ரசிகனாக ஒருவனின் எதிர்பார்ப்பு சேதுவின் 'வார்த்தை தவறிவிட்டாய்' அளவிற்கு இருக்கும். படத்தின் உணர்வு நிற்கும் இடம் கிட்டத்தட்ட அவ்வளவிலான ஒரு பாடலை வேண்டுகிறது. ஆனால் கிட்டவில்லை. பின்னணி இசைக்காக மன்னிக்கலாம். பிதாமகன் படத்தின் பின்னணி இசையை மிஞ்சுமா என்ற ஆவலோடு சென்றேன். 'கிட்டத்தட்ட' என்ற பதில் கொடுத்த ராஜாவுக்கு நன்றி.

தாய்மை பற்றிய படம்/ சோகப் படம்/ அழுகை தரும் படம் என்று வகைப்படுத்துவோர்...அழுகை தருவதை நல்ல படத்திற்கான அளவுகோலாகக் கொள்வோர் போன்றோர் மாறக் கிடைத்த வாய்ப்பு வேஸ்ட். படம் நகர்த்திச் செல்லும் பயணத்தின் அர்த்தம் புரிந்தால் இந்த வகைகள் எதிலும் அடங்காத சிறந்த படைப்பு நந்தலாலா. நன்றி மிஷ்கின்.

Monday, September 27, 2010

தாய்மொழி X தமிழ்

நான் எப்பொழுதும் தமிழில் எழுதுவதைக்கண்டு நான் தமிழ் வெறியன் என்றும், ஆங்கிலத்தை வெறுப்பவன் என்பது போலவும் சிலர் நினைகிறார்கள். கேள்வியும் கேட்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு எனது ஒரே பதில்.

பொதுவாகவே தாய்மொழி, தாய்நாடு போன்ற Buildupகள் என்னிடம் அதிகம் கிடையாது (ஒரு சில முட்டாள்தனம் நீங்கிய எண்ணங்கள் தவிற. அதைப் பற்றி பின்னதொரு பதிவில் பேசுவோம்). தமிழ் மொழிக் காரணாக பிறந்ததால் ‘தமிழ் தமிழ்’ என்று கோஷம் போடவேண்டாம். இதுவே என் கையில் இல்லாத என் பிறப்பு ஒரு வேலை பிரான்ஸ் நாட்டில் இருந்திருந்தால், பிரெஞ்சு கோஷம் போடா வேண்டுமா? இதற்கு பெயர் தான் பற்றா?

தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழி என்று அனைவருக்கும் (குறைந்தபட்சம் அனைத்து தமிழர்க்கும் ) தெரியும். அப்படியொரு மொழியை கண்டு/கற்று வியக்கிறேன். அவ்வளவு தான். இன்றும் அதனைப் படிக்க படிக்க வியப்பாகத் தான் உள்ளது. இதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்பு. தமிழை நான் படிப்பதும்/வியப்பதும்/நேசிப்பதும் கூட, அதன் சிறப்பினால் தான், தாய்மொழி என்பதால் அல்ல. நான் வேற்றுமொழிக் காரணாக இருந்து தமிழ் கற்றிருந்தாலும் இதே நிலை தான்.

என் கையில் இல்லாத என் பிறப்பு தமிழ் மொழிக்குறிதாக அமைந்தது ஒரு சந்தோசம். காரணம் என்னால் தமிழ் படிக்க, அதன் சிறப்புகளை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அது. அவ்வளவு தான். தமிழில் பேசுவதையோ எழுதிவதையோ நான் எக்கணமும் பெருமையாக நினைத்ததில்லை. தமிழனாக இல்லாமல்போயிருந்தால் இதனை செய்திருக்கப் போவதில்லை. அதன்பின் இதில் என்ன பெருமை?

சரி. தமிழனாகப் பிறந்து தமிழ் பேசுவதில் என்ன பெருமை? அது ஒரு சாதாரண விஷயம். தமிழர்களில் பலர் அந்நிய மொழியை பேசுவதில் பெருமை அடைகிறார்கள், எந்தவித அர்த்தமும் இல்லாமல். அவர்கள் செய்வது கேவலம் என்பதால் நாம் செய்வது சாதனை ஆகிவிடுமா? தமிழில் பேசுவது நமக்கு இயற்கை குடுத்த ஒன்று. அதனை பெருமை என்று சொல்பவன் யார் தெரியுமா? அவன் கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்கள் செய்யும் பிழையை வைத்துக்கொண்டு தன் சாதரனத்தனத்தை விளம்பரப்படுத்த நினைப்பவன். எனவே, தமிழ் ஒரு சிறந்த மொழி என்று மட்டும் தான் சொல்வேனே தவிர, தமிழில் பேசுவதை பெருமையாக நினைப்பவன் அல்லன் நான்.

அடுத்தது நம் காட்டு ராஜா 'ஆங்கிலத்திற்கு' போவோம். தமிழில் பேசுவதையே பெருமையாக நினைக்காத நான் எப்படி ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைப்பேன்? நிச்சயம் இல்லை. தனது தேவைக்கோ, வசதிக்கோ, செளகர்யத்திற்கோ ஆங்கிலம் பேசும் தமிழர்களுக்கு நான் என்றும் எதிர்ப்பு இல்லை. ஆனால் தனக்கு வாய்த்த சிறப்புகள் தெரியாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நினைக்கும் யோக்கியர்கள் பல. அதிலும் தமிழர்கள் இதில் கொஞ்சம் தலை தூக்கி நிற்பவர்கள். ஆங்கிலம் பேசுவதில் அப்படி என்ன பெருமை இருக்கிறதென்று எனக்கு புரியவில்லை. தமிழ் பேசுவதை கேவலம் என்று நினைத்து ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே என் எதிர்ப்பு. கவனிக்கவும் - இது தாய்மொழிப் பற்று அல்ல. அவ்வகையினரின் கேவலமான சித்தாந்தம் மட்டுமே காரணம். பின்னொருநாள் தமிழ் மொழி உலகையே ஆட்சி செய்தாலும் இம்மாதிரி ஆட்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்.

கேள்விகள்

என்னிடம் பரவலாக கேக்கப் படும் கேள்விகளில் ஒன்று - நீங்கள் கமல் ரசிகரா? இளையராஜா ரசிகரா? என்று :

எளிதாகப் புரிந்துகொள்பவர்களுக்கு ஏற்றாற்போல் சொன்னால்,
நான் யாருக்கும் ரசிகன் அல்ல. எனக்குள் இருக்கும் ரசனைக்கு மட்டுமே நான் ரசிகன். காசு குடுத்து படம் பார்ப்பவன் நான், என் தேவைக்கும் ரசனைக்கும் முக்கியத்துவம் குடுக்காமல், நான் ஏன் கமலுக்கும் இளையராஜாவுக்கும் முக்கியத்துவம் குடுக்க வேண்டும்?

கமலின் திறமை சாதாரண தமிழ் சினிமா இயக்குனர்களிடமிருந்து மிக உயர்ந்து நிற்கிறது. அதே போல் இளையராஜா. நான் இதுவரை கண்டத்தில் இவர்களின் தளத்தில் இவர்களே ராஜா. மட்டமான நமது மக்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் சுயநலம் மறுத்து நல்ல படைப்பாளிக்கும் தைரியங்கள் கொண்டவர்கள். இது தான் என் கருத்து.

மேல்தளம் சற்று பலவீனம் அடைந்தவர்க்கு ஏற்றாற்போல் சொன்னால்,

ஒருவரின் படைப்பைப் பார்த்து அதனால் Impress ஆகி, உடனே அவனுக்கு ரசிகன் ஆகிவிட வேண்டும். அதன்பின் அவனது படைப்புகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அதை ரசிக்க வேண்டும் என்பது தான் 'ரசிகன்' என்பதற்கு உங்களது அர்த்தம் என்றால், மன்னிக்கவும் நான் உங்கள் அளவுக்கு புத்திசாலி இல்லை. இப்படிப்பட்ட புத்திசாளிகளுக்குப் பெயர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்கள்.என்னைப் பொறுத்த வரையில் ரசிகன் என்பவன் ஒரு திறமைசாலியின் படைப்பு , பிரமிக்க வைப்பின், ஊரே அதை எதிர்த்தாலும் அது நல்ல படைப்பு என்பதில் நிச்சயமாக இருக்க வேண்டும் (எ.கா : ஹேராம்). அப்படியொரு திறமைசாலியின் படைப்பு தரமற்று இருந்து அதை அனைவரும் போற்றிப் புகழ்ந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் (எ.கா: PKS)
***********************************************************************************************

அடுத்த கேள்வி: உங்களின் பெரும்பாலான கருத்துக்கள் ஏன் விவாதத்திற்கு உட்பட்டவையாகவே உள்ளது?

அவ்வாறு எண்ணுபவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் ஒன்று தான் :
சிந்தனைக்கு உட்பட்ட அனைத்து விஷயங்களும் விவாத்திற்கு உட்பட்டவை தாம். But not vice versa.

Sunday, July 11, 2010

VÖIcÉ őf ĜōĐ


Whenever my friends talk about the strengths of ‘our legend’ over
others who travels in the same boat, my reply for them is always same:
‘Your points are illogical. Remember that you do compare God with
fellow humans’ :). Yes. I always address our legend as The God of
Music who is none other than Maestro Ilayaraja.

Forgetting his composing of music for few moments, I just thought
about his singing. Ilayaraja, the singer has been left unnoticed or
underrated in my opinion. The reason could be Singer Ilayaraja has
been over shadowed by the composer inside him. I would say that the
songs which have been sung by him reaches the depth of the song’s
emotion and would not be the same if sung by any other. His voice
gives that special and unique feeling in the listener’s mind making
him to drench into the mood of the song, especially the sad ones. I
even enjoy the vocal harmony by him which commences most of the songs
under this category.
In short, I would name that as Bio-magnetic Voice.

I heard from many stating that his voice is not a smoothest one. My
reply is just this: The same way, a good movie struggles to prove its
quality when competing with a commercial one, Ilayaraja’s voice need
good listeners to prove its quality and strengthJ. We must have come
across hundreds of sweet and soft voices, but according to me, this is
one voice which is Soul Stirring.

I find it very difficult to list out the best ones of his voice. I
would recommend you to listen to the below ones to know the strength
of his voice. I failed to restrict them to the count of 10…. What do
you feel on the below list of 20?


1. Then Pandi (Nayagan)
2. Thendral Vanthu (Avatharam)
3. Vaarthai Thavarivittai (Sethu)
4. Enge Sellum (Sethu)
5. Sorgame Endralum (Vooru vittu Vooru vanthu)
6. Engengo Kaagal Sellum (Nandha)
7. Naan thedum (Dharma pathini)
8. Thulli Ezhunthathu Paattu (Geethanjali)
9. Paravayin Kootil (Tamizh MA)
10. Ada Veetukku Veetukku (Kizhakku Vaasal)
11. Un Kuthama (Azhagi)
12. Ariyaatha Vayasu (Paruthi Veeran)
13. Janani Janani (Thaai Mugambigai)
14. Aaru Athu Aalam Illa (Muthal Vasantham)
15. Thediyathu (Mahanathi)
16. Raja Rajathi (Agni Natchatram)
17. Panam Mattum (Solla marantha kadhai)
18. Poo Malaye (Pagal Nilavu)
19. Appan Endrum (Guna)
20. Yaarathu (Pithamagan)

Tuesday, June 22, 2010

பிடித்த வசனங்கள் - I



"புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியல"
" எனக்கும் ரெண்டும் ஒன்னு தான்"

"அப்பா நீங்க தவம் இருந்து பெத்த புள்ள பா நான். என்ன கொன்னுடாதீங்க பா"
" டாக்டருக்கு கலர் டிவி, இன்ஸ்பெக்டருக்கு லேசெர் டிஸ்க், அப்பனுக்கு பாசமா? "

" உங்கள பொறுத்த வரைக்கும் நான் செய்றது கொலை. என்ன பொறுத்த வரைக்கும்
நான் செய்றது வெவசாயம் . புரியல? கல எடுக்குறது "

" தான் செய்றது தப்புனு கூட தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு
பழகிப் போச்சு டா "


(படம்: இந்தியன்; வசனம்: சுஜாதா)


*******************************************************************************


"சும்மா கிண்டல் பண்ணாத. எனக்கும் அவருக்கும் இடைல எதும் இல்ல"
" அவ்ளோ டைட்டா கட்டி புடிச்சிட்டாரா ? "

(படம்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ; வசனம்: சுஜாதா)


*******************************************************************************

"சந்தோசம் ங்கறது அனுபவிக்கையில தெரியாதுங்க ; அது இல்லாம
போகுது பாருங்க. அப்ப தான் தெரியும் "

அபிராமி : 'இது உன்ன வெட்டுன அருவா. இந்த வீட்ல இருந்து வந்த
அருவா. பேர பாரு"

கமல் : 'கொ'....கோட்டைச்சாமி? "
அபிராமி : அது பெரிய கொம்பு . இது சின்ன கொம்பு. ஆனா பெரிய மாடு. "

(படம் : விருமாண்டி ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· " யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி. மதம் பிடித்தால் தொல்லை தான் "

(படம்: தசாவதாரம் ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· "எங்க அப்பா ஒரு Engineer, Writer, கோவக்காரர் “

( படம் : கன்னத்தில் முத்தமிட்டாள் ; வசனம்: சுஜாதா )

*******************************************************************************

· " வீரம் னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது "

(படம் : குருதிப்புனல் ; வசனம்: கமல்ஹாசன் )


Sunday, June 20, 2010

ஒன்றே செய் - நன்றே செய் ..!

“ C _ _ L “

“ THIS PROPERTY BELONGS TO ANOTHER PERSON. “

“ 1 + 1 = 2 “

“ ONCE IN A MONTH, I HATE BEING A GIRL. “

“ 100% NATURAL. “

என்ன டா.. ஒவ்வொன்னும் சம்பந்தாமே இல்லாமல் இருக்குனு பாக்குறீங்களா?
சம்பந்தம் இருக்கு. இவை எல்லாம், பெண்கள் அணியும் டி-ஷர்ட் களில்,
அவர்களின் மேல்தளத்தின் எழுதியிருந்த வாக்கியங்கள். நான் நேருக்கு
நேராக கண்ட நம் ஊர் பெண்களின் அலும்புகள் மட்டுமே இவ்வளவு. இன்னும் சில
High Class மாநகரங்களின் முக்கியத் தெருக்களில் நடந்தால், என்னென்ன
கிட்டுமோ தெரியவில்லை. ஒரு புத்தகம் எழுதலாம் போலும்.

இவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியவைகள்:

எங்கே வெவ்வேறு வேலைகளுக்கிடையில், ஓரிரண்டு முக்கிய விஷயங்களை
பார்க்காமல் மறந்துவிடப் போகிறர்கள் என்று எங்கள் மீது நல்லுள்ளம்
கொண்டமைக்கு நன்றி.

இம்மாதிரியான வாக்கியங்களை மேலே அணிந்து, துப்பட்டா அணியும் அணைத்து
பெண்களையும் கேலி செய்யும் உங்கள் தைரியம் அருமையோ அருமை.

எம்மாதிரி உடை அணியும் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கக் கூடாது
என்று நியாயத்துக்காக போராடும் சில பல பெண்களின் வாயை மூடியமைக்கு கோடி
நன்றிகள்.

'வாக்கியங்கள் எதாவது இருந்தால், அதை மட்டும் படித்து விட்டு 'படம்'
பார்க்க மறந்துவிடுவர்' என்று இச்செயலில் எதாவது சூட்சமம் இருந்தால்,
மன்னிக்கவும். நாங்கள் அப்படிப்பட்ட ஏமாளிகள் அல்ல. குறைந்தபட்சம் நான்
அப்படி இல்லை.

உங்கள் தோற்றங்களையும், இன்ன பிற செயல்களையும் கவனிக்காத உங்கள் அம்மா
மார்கள், அப்பா மார்கள், அண்ணன் மார்கள், கணவன் மார்களுக்கு நாங்கள்
என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கடைசியாக, உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை. அதற்கான எங்கள் ஆதரவு
நிச்சயம் உண்டு

Saturday, June 19, 2010

காதலும் காமமும்


பல நேரங்களில்
என் கவனம் சிதறடித்து
வழி மாறி முனைவதற்கு
முழுக்க முழுக்க காரணம்
உன் கண்கள் மட்டுமே,
என்று சொன்னால்
அது பச்சைப் பொய்.

எது அழகு
என்று தேட வைக்கும்
அந்த விஷம அழகு
உன் மேனிக்கு
மட்டும் உண்டு.

காதலும் காமமும்
தன்டவாளக் கோடுகள்
என்றாய்.
இன்று ஏனோ
தடம் புரண்டது

பசி
மறக்கப் படுவதும்
மறுக்கப் படுவதும்
மறைக்கப் படுவதும்
இதைத் தவிர
வேறு எதில்?

காமரூபக் கதைகள்
படிக்கும் வேலையில்
எனை தடுத்த உனக்கு
தண்டணை மறுக்கப் பட்டது,
கதை நிஜம் ஆன
ஒரே காரணத்தினால்.

முதன்முறை
மனம் தொலைந்த
பொழுதின் அதே தயக்கம்.
இன்று முதன்முறை
வெட்கம் தொலைக்கும் பொழுதும்.

Friday, June 18, 2010

எனக்குள் நான் - V


-கே: ஆண் பெண் நட்பு?
ப: பிம்பம்.

-கே: அழகில்லா பெண்களை பார்த்து பரிதாபப் படுவதுண்டா?
ப: ஆம். அவர்கள் தன்னை அழகாக காண்பிக்க முயலும்போது.

-கே: கலாச்சாரம் என்பது ?
ப: உஷ்ணம் தரும் போர்வை.

-கே: காதலர்க்கு ஆதரவா?
ப: காதலுக்கு ஆதரவு.

-கே: பெண்கள் கிரிக்கெட் பிடிக்குமா?
ப: பெண்கள் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கும்.

Thursday, June 17, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா


-த்ரிஷாவின் அழகில் மயங்கி விழுபவர்கள்,
-
காதல் காட்சிகளைக் கண்டு உருகும் ஜீவன்கள்,
-
ஆரம்ப நிலைக் காதலர்கள்,
-
காதலுக்காக ஏங்கிக் கொண்டிருபவர்கள்,
-
சினிமாவில் வருவது போல் காதல் வயப்பட்டவர்கள்,
-
காதல் தோல்வி அடைந்தவர்கள்,
-
சுருக்கமாகச் சொன்னால் -சாதரணமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல் செய்பவர்களும், காதலுக்கு ஏங்காமல் இருப்பவர்கள்- தவிர்த்து இருக்கும்மற்றவர்கள்,
-
திரையில் வரும் காட்சிகளை தனக்கு ஒப்பிட்டு பிடித்தமானதாக்கிக் கொள்பவர்கள்,
-
தொடர்கதையில் காதல் செய்யும் முத்துவும் ராணியும் திருமணம் செய்தல் சந்தோஷப் படும் சாதாரணர்கள்,
-
காட்சிகளில் ஸ்டைல், ராயல் லுக், அழகு இருந்தால் சிறந்த காட்சி அமைப்பு என்று நம்புபவர்கள்,
-
அடாவடித் தனம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர், அதை விடுத்து சாதாரணமாக நடித்தால் அதை சிறந்த நடிப்புஎன்று சொல்பவர்கள்,
-
பாடல்களைக் கேட்பதற்கு முன்பே .ஆர். ரஹ்மான் என்ற பெயருக்காக பாடல்களுக்கு ரசிகர் ஆகுபவர்கள்,
-Script
இல்லை என்றாலும் வெறும் Making வைத்து 'நல்ல படம்' பெயர் கொடுப்பவர்கள்.

இவர்களில் ஒருவரேனும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை ஒரு சிறந்த படமாக மிகைப்படுத்திச் சொல்லக் கூடும். நம்பி விடாதீர்கள்.

பி. கு1: இது ஒரு Pizza Hut அட்டையில் வைத்து கொடுக்கப்பட்ட ஒன்றரை ரூபாய் பன்.
பி. கு2:
உன் கண்ணுல காதல் தெரிஞ்சிது', '10எண்ணுவதற்குள் திரும்பி பார்ப்பா' போன்ற 1008 முறை அரைத்த மாவுகள் நீங்கலாக நல்ல ரசனைக்கு கிடைத்த தீனிகள் இந்தஓரிரு வசனங்கள் மட்டுமே :

'
அவளோட Front விட Back தான் அதிகமா பாத்தேன். Not that I am complaining here’
'
நான் மட்டும் தான் பேசுவேன். அவ பேசவே மாட்டா. Like one way traffic to a heart breaking City'

Tuesday, June 15, 2010

பகிர்தல்

ஷில்மிஷம்:

நீ செய்தாலும் சரி
நான் செய்தாலும் சரி
கடைசியில் நீ வெக்கப்பட்டு
பழியை என் மேல் தள்ளிவிடுகிறாய்..!


பிடித்தது:

உன்னில் எனக்கு பிடித்தது
என்ன தெரியுமா?
இக்கேள்விக்கான என் விடையை
மற்றிக்கொண்டே இருக்கிறாயே,
அது தான்..!


பெண்மை:

எல்லைகள் மீறிய
தருணங்களில் அல்ல,
அவை மறுக்கப்பட்ட
தருணங்களில் உணர்ந்த்தேன்
உன் பெண்மையை


Monday, June 14, 2010

தலைசிறந்த பதிவர் ஆவது எப்ப்ப்புடீடீடீஈஈஈஈஈ...!


Blog யில் Superstar ஆவது, நாம் நினைப்பது போன்று எளிதான விஷயம் அல்ல. நிறைய கடினங்கள் உண்டு. தடைகள் உண்டு. இதை எல்லாம் பொருட்படுத்தாமல்உழைக்க வேண்டும்.

முதல் வேளையாக ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டும். அப்படி போட மறந்தால் கூட மன்னிக்கப்படும், ஆனால் ஒரு போஸ்ட்க்கு 50 comments குறையாமல் பெற வேண்டும்.

எல்லோருக்கும் புரிவது போலவும், எல்லோருக்கும் சுவாரஸ்யம் தருவது போலவும் உள்ள சில அறிய போஸ்ட்களை போட வேண்டும். எடுத்துக்காட்டாக , எதாவதுஒரு நண்பனை பற்றி, ' I met him first time @.…know him since..’ என்று ஆரம்பித்து ஒரு 10 பக்க சுய புராணம் படிக்க வேண்டும் . குறிப்பாக இந்த வகை தி வுகளைஆங்கிலத்தில் எழுதினால் மிக நன்று. சில GRE வாரத்தைகள் போட்டால் , மிகவும் நன்று.


காலை முதல் மாலை வரை, தான் சாபிட்டது, அணிந்த உடையின் நிறம், பார்த்த ஆட்கள் என்று (கடைசி ரக காதலர்கள் பேசிக்கொள்வது போல்) எல்லாகதைகளையும் எழுதி Blog ழகு படுத்த வேண்டும் .

நீங்கள் communicator இல் கூட்டமாய் மொக்கை போடுவதோ, அல்லது செயின் மெயில் களில் மொக்கை போடுவதோ கூடவே கூடாது. ‘FC la போய் Samosa சாப்டபோறேன். யார்லாம் வரீங்கஎன்று கேட்பதாக இருந்தால் கூட, அதற்கு நீங்கள் Blog தான் பயன்படுத்த வேண்டும்.

அதை விட முக்கியம் , நீங்கள் எழுதும் பதிவுகளில் ஏதேனும் ஒரு மூலையில் கூட சிந்தனைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. அப்படி ன்று நடந்தால் உங்களின்Blogger Superstar ஆகும் முயற்சி இத்துடன் நின்று விடும்.

"
கண்ணாடி பாத்தேன். உன் முகம் தெரிந்தது "
"
இட்லி சாப்டேன். உன் முகம் தெரிந்தது "
என்று யாராவது ஒரு பெண் கவிதை(விஞர்களே என்னை மன்னிக்கவும்) ழுதியிருந்தால்,
அதை படித்து விட்டு, மனசாட்சியை சற்று ஓரம் தள்ளி விட்டு, 'சூப்பரா இருக்குங்க. எப்புடி ப்புடி உணர்ச்சி பூர்வமா எழுதறீங்க" என்று சொல்ல வேண்டும்.

நாளைக்கு நான் பீச் போறேன். எந் நிற உடை அணிந்தால் அழகாக இருக்கும் என்பது போன்ற அணைத்து புத்திசாலிகளையும் சிந்தனையில் ஆழ்ந்துவிடும் கேள்விகளை அடிக்கடி கேட்டு, அதன் மூலம் comments rate யில் ஒரு சதம் பெற்றால், ங்களுக்கு அது ஒரு Added Advantage.

இது போன்ற, இன்ன பிற சிறந்த பதிவுகளை எழுதி, நல்ல படைப்புக்களை தர முயற்சி செய்யும் சில பதிவர்களையும் அடையாளம் தெரியாமல் மாற்றி விடவேண்டும்.

இவ்வாறாக செய்து வந்தால், வருடத்தில் இந்த நாள் மாத்திரம் அல்ல எல்லா நாளும் நீங்கள் தான் லைசிறந்த பதிவர்.

பி.கு: இதை படிக்கும் வேளையில், 'இதில் என்ன தவறு இருக்கிறதுன்று நினைத்தாலோ, உங்களை தாக்கும் விதத்தில் எழுதி இருப்பதாக தோன்றினாலோ , நீங்கள்பாதி வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ‘Blogger கூட்டத் தலைவர்ஆகும் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்பதில் அணுவளவும் சந்தேகம்இல்லை.