Blog யில் Superstar ஆவது, நாம் நினைப்பது போன்று எளிதான விஷயம் அல்ல. நிறைய கடினங்கள் உண்டு. தடைகள் உண்டு. இதை எல்லாம் பொருட்படுத்தாமல்உழைக்க வேண்டும்.
முதல் வேளையாக ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டும். அப்படி போட மறந்தால் கூட மன்னிக்கப்படும், ஆனால் ஒரு போஸ்ட்க்கு 50 comments குறையாமல் பெற வேண்டும்.
எல்லோருக்கும் புரிவது போலவும், எல்லோருக்கும் சுவாரஸ்யம் தருவது போலவும் உள்ள சில அறிய போஸ்ட்களை போட வேண்டும். எடுத்துக்காட்டாக , எதாவதுஒரு நண்பனை பற்றி, ' I met him first time @.…know him since..’ என்று ஆரம்பித்து ஒரு 10 பக்க சுய புராணம் படிக்க வேண்டும் . குறிப்பாக இந்த வகை பதி வுகளைஆங்கிலத்தில் எழுதினால் ம மிக நன்று. சில GRE வாரத்தைகள் போட்டால் , மிகவும் நன்று.
காலை முதல் மாலை வரை, தான் சாபிட்டது, அணிந்த உடையின் நிறம், பார்த்த ஆட்கள் என்று (கடைசி ரக காதலர்கள் பேசிக்கொள்வது போல்) எல்லாகதைகளையும் எழுதி Blog ஐ அழகு படுத்த வேண்டும் .
நீங்கள் communicator இல் கூட்டமாய் மொக்கை போடுவதோ, அல்லது செயின் மெயில் களில் மொக்கை போடுவதோ கூடவே கூடாது. ‘FC la போய் Samosa சாப்டபோறேன். யார்லாம் வரீங்க’ என்று கேட்பதாக இருந்தால் கூட, அதற்கு நீங்கள் Blog ஐ தான் பயன்படுத்த வேண்டும்.
அதை விட முக்கியம் , நீங்கள் எழுதும் பதிவுகளில் ஏதேனும் ஒரு மூலையில் கூட சிந்தனைக்கு இடம் ககொடுத்து விடக் கூடாது. அப்படி ஒன்று நடந்தால் உங்களின்Blogger Superstar ஆகும் முயற்சி இத்துடன் நின்று விடும்.
" கண்ணாடி பாத்தேன். உன் முகம் தெரிந்தது "
" இட்லி சாப்டேன். உன் முகம் தெரிந்தது "
என்று யாராவது ஒரு பெண் கவிதை(கவிஞர்களே என்னை மன்னிக்கவும்) எழுதியிருந்தால்,
அதை படித்து விட்டு, மனசாட்சியை சற்று ஓரம் தள்ளி விட்டு, 'சூப்பரா இருக்குங்க. எப்புடி இப்புடி உணர்ச்சி பூர்வமா எழுதறீங்க" என்று சொல்ல வேண்டும்.
நாளைக்கு நான் பீச் போறேன். எந்த நிற உடை அணிந்தால் அழகாக இருக்கும் என்பது போன்ற அணைத்து புத்திசாலிகளையும் சிந்தனையில் ஆழ்ந்துவிடும் கேள்விகளை அடிக்கடி கேட்டு, அதன் மூலம் comments rate யில் ஒரு சதம் பெற்றால், உங்களுக்கு அது ஒரு Added Advantage.
இது போன்ற, இன்ன பிற சிறந்த பதிவுகளை எழுதி, நல்ல படைப்புக்களை தர முயற்சி செய்யும் சில பதிவர்களையும் அடையாளம் தெரியாமல் மாற்றி விடவேண்டும்.
இவ்வாறாக செய்து வந்தால், வருடத்தில் இந்த நாள் மாத்திரம் அல்ல எல்லா நாளும் நீங்கள் தான் தலைசிறந்த பதிவர்.
பி.கு: இதை படிக்கும் வேளையில், 'இதில் என்ன தவறு இருக்கிறது’ என்று நினைத்தாலோ, உங்களை தாக்கும் விதத்தில் எழுதி இருப்பதாக தோன்றினாலோ , நீங்கள்பாதி வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ‘Blogger கூட்டத் தலைவர்’ ஆகும் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்பதில் அணுவளவும் சந்தேகம்இல்லை.
2 comments:
//ஆங்கிலத்தில் எழுதினால் ம மிக நன்று.//
// சில GRE வாரத்தைகள் போட்டால் , மிகவும் நன்று.//
எழுத்துப்பிழை களைந்தால் நன்று :-)
கூடவே இந்த சொற்கள் மூலம் எங்களை ஆழம் பார்ப்பதையும் எடுத்துவிடலாமே !
உங்கள் பதிவை பார்த்ததும் என்னோட கிறுக்கலை பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க எல்லாரும் கண் முன் வருகிறார்கள்...
பெண் கவிதை பத்தி சொன்னது கொஞ்சம் ஒவரா தான் இருக்கு. நான் மன்னிகலாம், ஏன்னா நான் கவிஞர் இல்லை, ஆனால்.. :)
-சுபா
Post a Comment