அதிகாலைச் சூரியன்,
கடற்கரை நிலவு,
மாலை நேர மலைச்சாரல்.
அனைத்துமே எங்களுக்கு
நான்கு சுவர்களுக்குள்..!
செய்ய துடிக்கும்
பெண்களுக்கா?
செய்ய வெறுக்கும்
பெண்களுக்கா?
யாருக்கு கிடைக்க வேண்டும்
இந்த அவலப்பெயர் ?!!
சுகந்திர தினம்.
காந்தி ஜெயந்தி.
பண்டிகை தினங்கள்.
அரசு விடுமுறைகள்.
என்றைக்கு குடுத்தார்கள்
உம்மக்கள் எங்களுக்கு ஓய்வு?
இல்லத்தரசிகளே,
நாங்கள் விட்டு வைத்த
மிச்சம் தான் உங்களுக்கு.
சுகம்,
வலி,
ஆணாதிக்கம்,
அசுர குணம்.
அனைத்தும்.
காமத்தை பகிர
மட்டும் விடிய விடிய
நேரம் போதவில்லை உனக்கு.
பலியை எங்களுக்கு மட்டுமா?
அந்த 3 நாட்கள் கூட
மறுக்க முடியாததன்
எங்கள் காரணம் இருக்கட்டும்.
உன்னை யோசித்துப் பார்.
கார்னர் சீட்.
இரவு விடுது.
தோழியுடன் விடுமுறை.
எங்கள் தயவு
பெறாதோர் பழகுவது
தூக்கம்,
உணவு,
தொழில்,
வாழ்க்கை.
அனைத்தும் ஓரிடத்தில்.
இருந்தாலும் சௌகர்யமில்லை.
3 comments:
வெகு சிறப்பாக இருக்கின்றது.சரியான சவுக்கடி.வாழ்த்துகள் நவீன்
மிக்க நன்றி உமா..!
பல குடும்பங்கள் சிதறி உடையாமல் இயங்குவதில் இவர்களின் பங்கு கணிசமானது.
வாழ்த்துக்கள்
Post a Comment