“ THIS PROPERTY BELONGS TO ANOTHER PERSON. “
“ 1 + 1 = 2 “
“ ONCE IN A MONTH, I HATE BEING A GIRL. “
“ 100% NATURAL. “
என்ன டா.. ஒவ்வொன்னும் சம்பந்தாமே இல்லாமல் இருக்குனு பாக்குறீங்களா?
சம்பந்தம் இருக்கு. இவை எல்லாம், பெண்கள் அணியும் டி-ஷர்ட் களில்,
அவர்களின் மேல்தளத்தின் எழுதியிருந்த வாக்கியங்கள். நான் நேருக்கு
நேராக கண்ட நம் ஊர் பெண்களின் அலும்புகள் மட்டுமே இவ்வளவு. இன்னும் சில
High Class மாநகரங்களின் முக்கியத் தெருக்களில் நடந்தால், என்னென்ன
கிட்டுமோ தெரியவில்லை. ஒரு புத்தகம் எழுதலாம் போலும்.
இவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியவைகள்:
எங்கே வெவ்வேறு வேலைகளுக்கிடையில், ஓரிரண்டு முக்கிய விஷயங்களை
பார்க்காமல் மறந்துவிடப் போகிறர்கள் என்று எங்கள் மீது நல்லுள்ளம்
கொண்டமைக்கு நன்றி.
இம்மாதிரியான வாக்கியங்களை மேலே அணிந்து, துப்பட்டா அணியும் அணைத்து
பெண்களையும் கேலி செய்யும் உங்கள் தைரியம் அருமையோ அருமை.
எம்மாதிரி உடை அணியும் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கக் கூடாது
என்று நியாயத்துக்காக போராடும் சில பல பெண்களின் வாயை மூடியமைக்கு கோடி
நன்றிகள்.
'வாக்கியங்கள் எதாவது இருந்தால், அதை மட்டும் படித்து விட்டு 'படம்'
பார்க்க மறந்துவிடுவர்' என்று இச்செயலில் எதாவது சூட்சமம் இருந்தால்,
மன்னிக்கவும். நாங்கள் அப்படிப்பட்ட ஏமாளிகள் அல்ல. குறைந்தபட்சம் நான்
அப்படி இல்லை.
உங்கள் தோற்றங்களையும், இன்ன பிற செயல்களையும் கவனிக்காத உங்கள் அம்மா
மார்கள், அப்பா மார்கள், அண்ணன் மார்கள், கணவன் மார்களுக்கு நாங்கள்
என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
கடைசியாக, உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை. அதற்கான எங்கள் ஆதரவு
நிச்சயம் உண்டு
4 comments:
touch and feel
சேர்த்துக் கொள்ளலாம் :-)
உங்கள் கோபத்தை ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருக்கிறீங்க. நல்ல டாபிக். சென்சிடிவான டாப்பிக்கை சென்சோட டச் பண்ணி இருக்கீங்க :-)
சுபா
நன்றி சுபா ..!
//சென்சிடிவான டாப்பிக்கை சென்சோட டச் பண்ணி இருக்கீங்க//
பன்ச் டயலாக் எல்லாம் பலமா இருக்கு :-)
Post a Comment